எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே மாவட்டம் முழுவதும் 11 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலான ஆறு வாய்க்கால்கள் வடிகால்கள் என 80 இடங்களில் 965 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு பாசன ஆறுகள் கால்வாய்கள் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி ரூபாய் 11 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது இடங்களில் நடைபெறும் இப்பணிகள் மூலம் 965.65 கிலோமீட்டர் நீளம் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது இதற்கான துவக்க விழா இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் சீர்காழி அருகே செம்பியன் வேலங்குடி கிராமத்தில் நடைபெற்றது இப்பகுதியில் உள்ள பொறை வாய்க்கால் தூர் வாரும் பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வி மெய்யநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா .எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இப்பணிகள் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் இதன் மூலம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை வரை தங்கு தடை இன்றி பாசனத்திற்கு சென்றடையவும், வெள்ள காலங்களில் பயிர்களுக்கு எவ்வித சேதங்கள் இன்றி வெள்ளநீர் விரைவாக வடிவதற்கு ஏதுவாக அமையும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.