கோவை வெள்ளலூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
சமூக சமத்துவத்தை வலியுறுத்தி புறாக்களை பறக்க விட்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபிகோவை வெள்ளலூர் பகுதியில் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை சார்பாக நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி சமூக சமத்துவத்தை வலியுறுத்தி சமாதான புறாக்களை பறக்க விட்டார்
கோவை வெள்ளலூர் பகுதியில் அம்பேத்கர் இரவு நேர பாடசாலை சார்பாக அண்ணல் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி கலந்து கொண்டார்..
முன்னதாக நிகழ்ச்சியில் சமத்துவம்,சகோதரத்துவம்,மற்றும் சமூக நீதியை காக்கும் விதமாக உறுதி மொழி ஏற்கப்பட்டது இதனை தொடர்ந்து சமூக சமத்துவத்தை வலியுறுத்தி புறாக்கள் பறக்க விடப்பட்டது..
இதில் மாற்றுத்திறனாளி மாணவர் முன்னிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்க விடப்பட்டன நிகழ்ச்சியில் பேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி,சமூகத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இன்று உயர் பதவியில் இருக்க காரணமான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததில் தமிழகத்தில் பெரியார்,முன்னால் முதல்வர் கலைஞரின் பங்கு இருப்பதாக கூறினார்…
நிகழ்ச்சியில்,விழா ஒருங்கிணைப்பாளர் சந்துரு,வழக்கறிஞர் சூர்ய குமார்,நமச்சிவாயம்,லட்சுமணன்,சந்திரசேகர்,அமிர்தலிங்கம் ,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,தகவல் தொழில் நுட்ப பிரிவு அபுதாகீர், முகம்மது அலி,காமராஜ்,டிஸ்கோ காஜா,கோவை தல்ஹா உட்பட பலர் கலந்து கொண்டனர்…