கமுதியில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாள் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழா அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக கமுதி தெற்கு ஒன்றியம் சார்பில், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் வேலவன் தலைமையில், மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதில்
தேவேந்திர குல வேளாளர் இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் தளபதி ராஜ்குமார் , 14- வது வார்டு கவுன்சிலர் சத்யாஜோதி ராஜா, பாஜக மாணவரமைப்பு முன்னாள் மாநில தலைவர் டாக்டர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆர்எஸ் ஜில்லா முக்கிய பிரமுகர் வழக்கறிஞர் முத்தரையப்பன், நிர்வாகிகள் மத்திய ஒன்றிய தலைவர் போதிராஜா, தெற்கு ஒன்றிய தலைவர் அழகுமலை, மகளிர் அணி முன்னாள் மாவட்டத் தலைவி வெள்ளையம்மாள், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் ராமமூர்த்தி, செந்தில், பாண்டியன், மாவட்டச் செயற்குழு சண்முகவேல், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சித்தரை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய தலைவர் கணேசன், வழக்கறிஞர்கள் அஜித்குமார், திருக்குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்