துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் 13/04/2025 அன்று ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா நடைபெற்றது.இதில் பெரம்பலூர் செந்தூர் மெடிக்கல்ஸ் உரிமையாளர் சுகுமார் , அபிராமி ராஜாராம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
இதில் Rtn டயர் வை. சரவணன் ,Rtn ப. கிருஷ்ணகுமார், Rtn கோவிந்தபுரம் ரா.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் முதல் மனையை வாங்கிய பெரம்பலூர் செந்தூர் மெடிக்கல்ஸ் உரிமையாளர் சுகுமார் மற்றும் செ.சசிகுமார், பெ.உதயகுமார் ஆகியோருக்கு ரோட்டரி சங்க தலைவர் துரைராஜ், முன்னாள் தலைவர்கள் சரவணன், பாலசுந்தர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்