தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடு
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கம்பத்திற்கு புனித நீர் எடுத்து, வருதல் காவடி எடுத்து வருதல், பூவோடு எடுத்து வருதல், பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அதில் தாராபுரம் வடதாரையில் இருந்து ஊர் நாட்டாமை தலைமையில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து சின்ன கடைவீதி பெரிய கடைவீதி டி. எஸ் கார்னர் வழியாக கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வடதாரை விநாயகர் கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.