என் நெஞ்சத்தோடு என்றும் இணைந்திருக்கும் அன்பு சான்றோர் இனப் பெருமக்களுக்கும் உலகில் வாழும் அனைத்து தமிழின சகோதர சகோதரிகளுக்கும், எனது இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்..!
மலரும் விசுவாவசு தமிழ் புத்தாண்டில், உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வு சிறக்க எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த இனிய புத்தாண்டு நம் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். நம் நாடாரின் மக்கள் இன்னும் மேன் மேலும் எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்கவேண்டும். நமது சமுதாயத்திற்கும், மற்ற சகோதர சமுதாயங்களுடனும் இணைந்து “சுய ஜாதி பற்றுடனும் பிற ஜாதி நட்புடனும்” பழகி உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடந்த ஆண்டுகளில் இருந்த கசப்பான அனுபவங்கள் இனி வரும் காலங்களில் இனிமையாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். நம் சுற்றத்தாரும் நண்பர்களும் ஏனைய தமிழ் சொந்தங்களும் மகிழ்ச்சியாக மனம் நிறைந்த வாழ்க்கை வாழவேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்..!