ஏப்ரல் -13 : வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் புதிய பேருந்துநிலையத்தில், இன்று (13.04..2025) காலை -10.30 மணியளவில் நடைபெற்றது.
பெரம்பலூர் மண்டலச் செயலாளர் தங்க. இரத்தினவேல் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். பெரம்பலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ம. ஹமர்தீன், கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் இந்நிகழ்வில் அக்கட்சியின் மாநில கொள்கைபரப்பச்செயலாளர் தஞ்சை. க. கரிகாலன் கண்டனவுரையாற்றினார்.
தொடர்ந்து அக்கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளர் ஜான்சிராணி, கிழக்கு மாவட்டப் பொருளாளர் கீர்த்திவாசன், குன்னம் தெற்கு தொகுதிச் செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர்.இறுதியாக பெரம்பலூர் கிழக்கு மாவட்டத்தலைவர் மைக்கேல் நன்றி தெரிவித்தார். நிகழ்வில் 100-க்கும் மேற்ப்பட்ட அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.