எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. ஐபெட்டோ அகில இந்திய பொதுச் செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழக அரசின் விருது பெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பாராட்டு விழா, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்ட விழாவில் சிறப்பாக விருந்தினராக ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.