கந்தர்வக்கோட்டை
தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவம் தேர்வு தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறு, ஏழு எட்டு வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு தொடங்கியது. மாணவ, மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதினார்கள் எழுதினார்கள். மாணவர்களுக்கான தேர்வு எழுதுவதற்கான அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி நடைபெற்ற தேர்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, பட்டதாரி ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோர் தேர்வு மைய கண்காணிப்பாளராக செயல்பட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசும் பொழுது மாணவர்கள் படிக்கும் களத்தில் சிறப்பாக படித்து தேர்வினை எழுதி வெற்றி பெற வேண்டும். ஆறாம் வகுப்பு பயிலும் போதே போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு படிக்க காலத்திலேயே போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பி எஸ் சி, எஸ் எஸ் சி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளை எளிதில் வெல்லலாம் மாணவர்கள் அவ்வாறு தயார் செய்து படிக்குமாறு அறிவுரை வழங்கினார். தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இன்று தொடங்கிய தேர்வு வருகிற 24-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.