மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப் பாளரான துரைசிங்கம் . இவர் கடந்த சில வருடங் களுக்கு முன்னர் மனைவி இறந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் துர்நாற்றம் வீசுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படை யில் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this to your Friends