இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டமானது மதுரையில் கூட்டமைப்பின் தலைவர் ஹரிகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டினை வருகிற ஆகஸ்ட் 8,9 மற்றும் 10 -ந் தேதிகளில் 3 நாட்கள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகரில் நடத்துவது எனகூறினார். கூட்ட முடிவில் அகில இந்தியத் துணைத் தலைவர் மயில் நன்றி கூறினார். கூட்ட நிகழ்வுகளை மதுரை மாவட்ட இந்தியப்பள் ளி ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பாண்டி மற்றும் நிதி காப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
