மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.
விவசாயிகளுக்காக மத்திய மாநில அரசுகள் வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கோயில் நிலங்கள் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆர்.டி.ஆர் அடிப்படையில் வழங்க வலியுறுத்தியும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுந்து பயிறு சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல் குறித்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையமும் மற்றும் சிக்கல் வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கியது போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்,
கோவில் மற்றும் ஆதீனத்துக்கு சொந்தமான விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை அரசு கொள்கை ரீதியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர்.