ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இரத்து செய்து அதிரடி தீர்ப்பு :-
ராணிப்பேட்டை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில சுயாட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில்.நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு (ம) பேரூர் செயலாளர் ஜி.ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் நிகழ்வின் போது மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் N.K.சரவணன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.