பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் .

பாபநாசம் அருகே இலுப்பக்கோரை பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய திருவிழா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்……
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…..
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுக்கா இலுப்பக்கோரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்று மேளதாளங்கள் முழங்க, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.