பிரபு தாராபுரம் செய்தியாளர்.
செல்:9715328420
தாராபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சதுரங்க கலைக்கூடம் சார்பில்
மாவட்ட அளவில் நான்காம் ஆண்டு பள்ளி-மாணவ-மாணவிகளுக்கான செஸ் (சதுரங்கம்) போட்டி தாராபுரம் புறவழிச் சாலையில் உள்ள மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியை மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மகாராணி கலைக்கல்லூரியின் சேர்மன் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
தாராபுரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் கு. பாப்பு கண்ணன் சதுரங்க போட்டிகளை தொடங்கி வைத்தார் சிறப்பு விருந்தினராக தமிழ்ச்செல்வி. சித்ரா பாண்டே. நளினி நிர்மல் குமார். சுதா செந்தில்குமார். காஞ்சனா ரவிக்குமார். குணவதி பாலகிருஷ்ணன்,
ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர்.
5-சுற்றுக்களாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் 6, 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள்- மற்றும் பொது பிரிவினர் என தனித்தனியாக நடத்தப்பட்ட செஸ் போட்டியில் முதல் 3 பரிசுகளைப் பெற்ற ஐந்து பிரிளை சேர்ந்த
சதுரங்க போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் பொது பிரிவில் பங்குபெற்ற நபர்களுக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் திருப்பூர் மாவட்டம் மற்றும் மற்றும் தாராபுரம் தாலுகா பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட சதுரங்க போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தாராபுரம் செஸ் கிளப் தலைவர் எஸ்.தேவி பிரியா செயலாளர் பிரவீன்நாத் பொருளாளர் தினகரன் மற்றும் பிரேம்நாத் செய்திருந்தனர்.