கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் புளியங்கன்டி அருகே தனியார் தோட்டத்தில் கிட்டுசாமி ( 75) என்பவர் இன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். மதியம் சுமார் 3 மணி அளவில் திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று அவரை தாக்கியது.
தடுமாறி நிலை குலைந்த கிட்டுசாமி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.