தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் காவடி கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி விழா.
நடைபெற்றது. அதையொட்டி கடந்த 5-ம் தேதி விநாயகர் பூஜை நடத்தப்பட்டு திருப்பூர் சென்று காவடி அழைத்தல் நடைபெற்றது. 6-ம் தேதி கொடுவாய், வஞ்சிபாளையம், வேங்கிபாளையம் காவடிகள் அழைத்து வரப்பட்டது. மேலும் அன்று செம்பாளையம், நொச்சிபாளையம், குண்டடம், வடுகநாதபுரம், தாராபுரம் தெக்கலூர் காவடி அழைத்தல் நடைபெற்றது. நேற்று குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமிக்கு தீர்த்தமிட்டு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
பின்பு சங்கபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு வானவேடிக்கையுடனும்மேளதாளங்களுடன் காவடிகள் எடுத்துவரப்பட்டது.பின்பு மாரியம்மனுக்கு தீர்த்தமிட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் கோவில் திடலில் ஸ்ரீ முத்து விநாயகர் கலைக்குழுவின் ஆசிரியர்கள் மயில்சாமி,நடராஜ்,புவனேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான பவளக்கொடி கும்மியாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காவடிச் செயலாளர் வெங்கடாசலம், மேனேஜர் பழனிச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.