திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இளவரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பொறுப்பு நிர்வாகிகளாக இருந்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொட்டையூர், ஆலங்குடி, தொழவூர், ஆண்டாங்கோவில், வலங்கைமான் ஆகிய இடங்களில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-….
தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு சாதகமான அலை வீசுகிறது. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து ஏமாந்து விட்டோம் என்று மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசியல் வியூகம் வகுத்து வெற்றி பெறுவதற்கான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகின்றார்.
அவருடைய வியூகப்படி 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அதற்கு அடிப்படையாக இந்த பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் வாக்காளர்களை தொடர்பு கொண்டு அதிமுகவின் சாதனைகளை விளக்கி ஆதரவை திரட்ட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.
கள ஆய்வு ஆலோசனை கூட்ட நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே. சங்கர், பொதுக் குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ் , நகரச் செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, ஆர்.ஜி. பாலா, தொழவூர் முனுசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைத் தலைவர் என்.ராஜராஜசோழன் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.