தமிழ்நாட்டில் உலகத்தின் முதல் சிவன் ஆலயமான இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகம் விழாவை சமஸ்தானம் ராணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பெருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மற்றும் சந்தன காப்பு அகற்றப்பட்ட நடராஜரை தரிசனம் செய்தனர்.
இந்த கும்பாபிஷேகம் பெருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்றுச் சென்றனர்.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.இந்த மாபெம் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர் மாநில முதன்மை செயலாளர் சரவணன் ஜி தலைமையில் சிவக்குமார், நாகா , முரளி , சக்தி , முத்துவேல்பாண்டியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.