முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
விம்கோ மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ பணிமனை அருகே தண்ணீர் பந்தல் அமைத்து காலை தண்ணீர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து தண்ணீர் பந்தலில் பொது மக்களுக்கு நீர்மோர் தர்பூசணி குளிர்பானங்கள் இளநீர் நுங்கு வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர பேருந்துகளில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் பயணம் செய்யும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்து கிடக்கும் பொது மக்களுக்கும் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ராமநாதன், அயலக அணி மாவட்ட தலைவர் எஸ்.டி.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன்,இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன் குமார், கவுன்சிலர் தமிழரசன் என்கின்ற தம்பையா விடுதலை சிறுத்தை கட்சி வடசென்னை மண்டல துணை செயலாளர் அலெக்சாண்டர். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.