இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் (HITECH) 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. நடராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு அறிக்கையை வழங்கினார்.

மாணவர்கள் சமூக அர்ப்பணிப்புடன் இருக்கவும், அனைத்து தளங்களிலும் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திருமதி டி.ஆர். சரசுவதி அவர்கள் இப் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி மாணவர்கள் தம்முடைய கல்வியறிவை பயனுள்ள வகையில் சமூகத்திற்குத்தர வேண்டும் என அறிவுறுத்தினார் இந்நிகழ்வில் சென்னை, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸின் தொழில் துறையின் தலைமை ஆலோசகர் மற்றும் உதவி துணைத் தலைவர் திரு. கிருஷ்ணா பாலகுருநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்தி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்

தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் சார்பில் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார். வேகமாக நகரும் உலகில் மாணவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

கற்றல் பட்டப்படிப்புடன் முடிவடைவதில்லை என்பதை அவர் தமது உரையில் எடுத்துரைத்தார். இது ஒரு வாழ்நாள் பயணம். இதில் ஆர்வத்தில்
இருப்பதும்புதிய தொழில்நுட்பங்களுக்குப் நம்மை மாற்றிக் கொண்டு புதுப்பித்தல் அவசியமான ஒன்றாகும் என வாழ்த்தினார் .

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலாளர் டாக்டர் கே. பிரியாவும் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை
வாழ்த்தினார். இப்ப பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 550 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அவர்களில் இருபது மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ஆவர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *