கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே அருள் புறத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம்…..
5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மழையில் நனைந்து வீண்……
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள் புறம் செந்தூரான் காலனியில் பேச்சி முத்து என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இதில் நான்கு குடும்பத்தினர் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.
இதனிடையே சிவக்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது குடும்பத்தினர் வசிக்கும் இரண்டு வீடு நேற்று சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக வீட்டின் சிமெண்ட் குறைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் இதன் காரணமாக வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் மழையில் நனைந்து வீணானது.
மேலும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைகளும் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. மேலும் இதன் மதிப்பு5 லட்சம் ஆகும் என்று அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வீட்டில் உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார்.