கலிங்கமுடையான்பட்டியில் சுவாமி விவேகானந்தா மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டியில் 05/04/2025 அன்று சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு முதன்முதலாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரின் பெயர் பெ.நிஷானி வரவேற்புரை ஆற்றினார்.இப்பள்ளியில் யூகேஜி வகுப்பு முடித்து முதல் வகுப்புக்கு செல்லும் 36 பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி ராமன் ரீசர்ச் பவுண்டேசன் நிறுவனர் முனைவர் சந்திரசேகரன் தலைமை விருந்திராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினார்.திருச்சி பெல் நிறுவனத்தில் செயல்படும் கலாம் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.மேலும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அம்பிகா மற்றும் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்