வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை
யில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றத் துடிக்கும் இந்த சட்ட விரோத வக்ஃப் வாரிய மசோதாவை கண்டித்து மதுரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தயமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவர் தனது கண்டன உரையில் இரவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் மூலம் ஆளும் ஒன்றிய பா.ஜ.க அரசு இஸ்லாமியர்களின் சொத்துக்களை கொள்ளையர் களை போன்று கொள்ளையடிக் கத்துடிக்கிறது என்று கூறினார் மேலும் வக்ஃப் மசோதா குறித்து தொடர் பொய்களை நாடாளுமன்றத்திலேயே அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் கூறி வருகின்றனர்.
வக்ஃப் குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாமல் நாடாளுமன்றத்தில் பேசி வரும் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், என்று பேசினார்.
இறைவனுக்காக நல்வழியில் வழங்கப்பட்ட இந்த சொத்துக் களை தனது நண்பர்களுக்கு தாரை வார்க்க மோடியால் நடத்தப்படும் நாடகமே இந்த வக்ஃப் திருத்த மசோதா என்று பேசினார்.
இம்மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வோம் என அறிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.கஸ்டாலினுக்கும் அதை எதிர்த்து கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்ட ராசா, திருச்சி சிவா, உள்ளிட்ட இந்திய கூட்டணியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார்.
அதே போல் இம்மசோதாவிற்கு எதிராக மாநிலங் களவையில் வாக்களித்துள்ள அதிமுக, பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ உள்ளிட்ட கட்சிகளுக்கு இஸ்லாமியர்களின் சார்பாக நன்றியை தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமை
தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சுல்தான் நன்றி கூறினார்.