பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் விஜய் அரசியல் நாடக வித்தை காட்டி வருகிறார் என்றும்..
பாஜக மாநில தலைவர் போட்டியில் மீண்டும் அண்ணாமலையே வர வேண்டும் என்றும் தமிழகத்தில் அவரால் அரசியல் எதிர்க்கட்சிகள் கலங்க வைக்கப்பட்டுள்ளன என்றும், பாஜக மாநில தலைவராக மீண்டும் அவரே தகுதி உடையவர் என்று அகில பாரத இந்து மகா சபையின் மாநில தலைவரும் தேசிய துணைத் தலைவருமான பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பூண்டியில் உள்ள புஷ்பவனம் அக்ரஹாரத்தில் கஜினி முகமதுவால் உடைக்கப்பட்ட அந்தரத்தில் மிதக்கும் சிவலிங்கத்தின் உடைந்த சிறு சிறு பாகங்களை லிங்க வடிவமாக செய்து பல தலைமுறைகளாக தமிழ்நாட்டில் காப்பாற்றி வந்தது தற்போது மீண்டும் சோமநாதர் ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்ய தீர்மானம் செய்யப்பட்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் வரப்போகும் 30.04.2025. தேதி ஒப்படைக்க உள்ளதால் அகில பாரத இந்து மகா சபையின் மாநில தலைவரும் ஒரே தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற அகில பாரத இந்து மகா சபையில் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது வக்ஃபு வாரிய சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் விஜய் அரசியல் நாடக வித்தை காட்டி வருகிறார் என்றும்,பாஜக மாநில தலைவர் போட்டியில் மீண்டும் அண்ணாமலையே வர வேண்டும் என்றும் தமிழகத்தில் அவரால் அரசியல் எதிர்க்கட்சிகள் கலங்க வைக்கப்பட்டுள்ளன என்றும், பாஜக மாநில தலைவராக மீண்டும் அவரே தகுதி உடையவர் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அகில பாரத இந்து மகாசபை துணைதலைவர்கள் சாம்ப வைத்தியநாதன் ,இராம. நிரஞ்சன், திருச்சி ராகவன், மாநில செயல் தலைவர் கோவை குருஜி செந்தில், அரியமங்கலம் மணிகண்டன், அகோரி கோவை நிர்மலா மாதாஜி, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் வருகின்ற ஏப்ரல் 25 ம் தேதி அகில பாரத இந்து மகா சபையின் தேசிய தலைவரின் ஸ்வாபிமான் யாத்திரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.