புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டு நடைபெற்று வந்தது.
அதில் குறிப்பாக தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, பெரியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்ட திருத்தம் மசோதா உள்ளிட்ட பத்து மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார் 10 சட்ட முன் வடிவுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 142 வது பிரிவின்படியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இனி பல்கலைக்கழகங்களில் வேந்தர் முதல்வர் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்தியாவிற்கே பெற்றுக் கொடுத்த முன்மாதிரி முதல்வராக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் திகழ்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரவேற்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பல்கலைக்கழகங்களில் வேந்தராக பதவி ஏற்க உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மாநில முதல்வரே சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பெற்றுக் கொடுத்ததை போல தந்தை வழியில் இன்று இந்தியாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இனி மாநில முதல்வர்களே பதவி வகிக்க லாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மாநில உரிமைக்காக போராடிவரும் தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு போராடும் என்ற முழக்கத்தோடு தொடர்ந்து போராடிவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ,மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரிடம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாற்று திறனாளி அரசு ஊழிய, ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டு அமல்படுத்த வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.