ஒன்றிய பாஜக அரசு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு – 1 ம் பகுதிக்குழு மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் அரசரடி பகுதிக்குழு சார்பில் சொக்கலிங்க நகர் பகுதியில் சி.பி.எம் பகுதிக்குழு உறுப்பினர் பாக்யராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாதர் சங்க பகுதி குழு செயலாளர் மல்லிகா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார், சிபிஎம் பகுதிக்குழு செயலாளர் வீரமணி கண்டன உரை யாற்றினார் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் மா. கணேசன் மற்றும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து ஒன்றிய அரசின் விலை உயர்வுக்கு எதிராக ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தை மாதர் சங்க பெண்கள் நடத்தினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கேஸ் விலை உயர்வை தொடர்ந்து பெட்ரோல் டீசல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெயில் கலால் வரி உயர்த்தப்படுவதை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.