கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்….
அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின் பேரில் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய விக்னேஷ் சுப்பையா, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அறிவிக்கும் அணைத்து பணிகளை நிர்வாகிகளுடன் இணைந்து களத்தில் அயராது உழைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து திமுக அரசின் 1000 கோடி டாஸ்மாக் ஊழலில் யாரை காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதை கேள்விகேட்கும் விதமாக சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயளார் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் அந்த தியாகி என்ற பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
அந்த கேள்விக்கு வலு சேர்க்கும் விதமாக கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் பேட்ஜுகள் அணிந்து “காப்பாற்றாதே காப்பாற்றாதே குற்றவாளிகளை காப்பாற்றாதே” என கோசங்களை எழுப்பினார்கள்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மண்டல இணை செயலாளர் வினோத்,கோவை மண்டல துணை செயலாளர் ராகேஷ், மற்றும் ரியோஸ்கான், கோவை மாநகர மாவட்ட செயலாளர் சக்திவேல்,தெற்கு மாவட்ட செயலாளர் சசிக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன். உட்பட அதிமுக தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.