கமுதியில் அக்னிசட்டி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட. முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா பங்குனி 19ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிநடைபெற்று வருகின்றது தினமும் காலையிலும் இரவிலும் முத்துமாரியம்மன் கேடயத்திலும் வாகனத்திலும் நகர்வலம் சென்றுவரும் பங்குனி25பொங்கல் பண்டிகையையேட்டி ஏராளமான பக்தர்கள் பொங்கல்வைத்து மாவிளக்கு எடுத்து வழிபாடுசெய்தனர்

அக்கிசட்டி திருநாளான புதன்கிழமை கமுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்துபக்தர்கள் அக்னிசட்டி பால்குடம் தவழும்பிள்ளை ஆயிரங்கன்பானை கரும்பாலைதொட்டி எடுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினார்கள்

வரும் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி மஞ்சள்நீராட்டுவிழா நடைபெறும் அன்றிரவோ கொடிஇறக்கப்படும் நிறைவுநாளான பங்குனி 29ந்தேதி சனிக்கிழமை மாலை முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாரி புறப்பட்டு முக்கியவீதிகளின் வழியாக குண்டாற்றினை சென்றடையும் வாகனவேடிக்கையுடன் முளைப்பாரி கரைக்கப்படும் இதில் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்

Share this to your Friends