திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில். சிபிஎஸ் சந்தா இறுதித்தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிடப்பட்டது.
கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரும் கோப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தில் நிலுவையில் உள்ளதை விரைவாக ஒப்புதல் வழங்க கோரியும், கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்திற்கு பின்பு நான்கு மாதத்தில் தீர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஒப்புதல் வழங்க கோரி எழுத்துப்பூர்வமாக ஒத்துக் கொண்ட வருவாய் நிர்வாக ஆணையாளருக்கு நினைவூட்டவும், அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் ரூபாய் 15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.