செய்தியாளர் வெங்கடேசன்.

) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் (POCSO) உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும்

கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் lottery விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ஜாபர் சித்திக், (அரக்கோணம் உட்கோட்டம்), ரமேஷ்ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), வெங்கடகிருஷ்ணன் (IUCAW) , ராமச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்),காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *