கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களின் நன்மை கருதி, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், போச்சம்பள்ளி செயற்பொறியாளர் இந்திரா தலைமையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
போச்சம்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட, போச்சம்பள்ளி, அரசம்பட்டி, மத்தூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நன்மை பெறும் விதமாக, மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், அதிகப்படியான மின் கட்டணம் குறித்தும், மின் மீட்டர்களின் குறைபாடுகள் குறித்தும், வீடுகளில் குறைந்த அழுத்த மின்சாரம் குறித்தும், கிராமங்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் இம்மாமில் பங்கேற்று, அவர்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான புகார்களை பெற்று உடனடியாக அதற்கான தீர்வுகளை அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள்ளாக தீர்த்து வைப்பதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் விரைந்து முடித்து கொடுத்து இருப்பதாகவும், செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் மட்டும் நடைபெறும் முகாம் காலை 11 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இம் முகாமில் கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளர், மின்சார துறைசார்ந்த அலுவலர்கள், கோட்ட பொறியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.