திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா (1912 – 2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை மு.வேண்டாமிர்தம் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆறுமுகம், ஆசிரியர் பயிற்றுநர் சுப.தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியை ஜோதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தெள்ளாறு வட்டார கல்வி அலுவலர் தே. ரங்கநாதன் பங்கேற்று, குத்து விளக்கேற்றி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மேலும் மாணவர்கள் தனித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நூற்றாண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் அரிவாசு, நம்பெருமாள், ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இடைநிலை ஆசிரியை லட்சுமி, ஆர். சீனிவாசன் (சந்தியா டிரேடர்ஸ்), கே.சுரேஷ், வாசன் & கோ கிருஷ்ண மூர்த்தி, எஸ்எம்சி நிர்வாகி காமராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இறுதியில் இடைநிலை ஆசிரியர் பி.சரவணன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.