பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா…
திரளான பக்தர்கள் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பல்லக்கு ஏழூர் புறப்பாடு வருகின்ற ஏப்ரல் 13மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி மூன்றாம் நாளான இன்று, தேவனாகிய அம்பாள் சமேத சக்கரவாகஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
கைலாய வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு அய்யம்பேட்டை சுற்றியுள்ள முக்கிய வீதிகளின் வழியாக சுவாமிகளை தோளில் சுமந்தவாறு மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை, சிவத்திருகயிலாய சிவபூத கண திருக்கூட்டம் சிவனடியார்கள் செய்திருந்தனர்.