தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி பகுதி கழக செயலாளர் மனோகர் வரவேற்புரையாற்றினார், கழக அமைப்பு செயலாளர் ரெத்தினவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பட்டியல் பெறப்பட்டது. மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை அமைப்பாளர் துரை.வீரணன், மாவட்ட இணைச்செயலாளர் சாவித்திரி கோபால், அவைத் தலைவர் நாகராஜ், தஞ்சை மத்திய ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், கரந்தை பகுதி செயலாளர் பஞ்சாபிகேசன், மருத்துவர் தங்க.கண்ணன், 51வது வட்டச் செயலாளர் வீரமணி, என்.ஆர்.வி.நேரு, விஜயராஜ், மகளிரணியினர் அமுதா, வசந்தி, சுசிலா, அனிதா, ஆரோக்கிய ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.