பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….
இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் வக்ஃபு வாரிய மசோதா சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் ராஜா ஒன்றிய பொருளாளர் சாகுல் ஹமீது , மாவட்ட இணை செயலாளர் வினோத் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பொருளாளர் பன்னீர், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயமணி, நகரச் செயலாளர் உதயசூர்யா, நகரப் பொருளாளர் செல்லப்பா, மற்றும் நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கையில் கொடியுடன் வஃக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி கண்டன கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.