பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால அணுகு சாலைப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தாமதமாகப் போட்டுவருவதால் வரும் 10-4-2025 இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கோட்டைக்காடு பகுதியைச் சார்ந்த இரண்டு மாவட்ட மக்களும் முடிவுசெய்து கடந்த ஒருவாரமாக மக்களைச் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிவந்தனர்.
இந்நிலையில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் (DRO) தலைமையில் இன்று (9-4-2024) அமைதிப் பேச்சுவார்த்தை செந்துரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட வருவாய் அலுவலர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், செந்துரை வட்டாச்சிர், செந்துறை காவல்துரை ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது
போராட்டக்குழு தலைவர் மு. ஞானமூர்த்தி, மற்றும் கடலூர் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் சம்பேரி ஆடியபாதம், பாசிக்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருஞானம், விடுதலை சிறுத்தை அரியலூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் பாலசிங்கம், அதிமுக (ஓபிஎஸ்) எழிலரசன், கோட்டைக்காடு பொதுமக்கள் சார்பில் அகத்தியர், குமார், இராமலிங்கம். செல்வராசு, பரமசிவம், அன்புமணி ரங்கநாதன், ஆலத்தியூர் ராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோட்ட செயற்பொறியாளர் பூங்கொடி, உதவிப் பொறியாளர் ஜெயவேல், கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையில் 31-5-2025 ம் தேதிக்குள் கோட்டைக்காடு அணுகு சாலைப் போட்டு முடிப்பது எனவும், திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி தரமான சரளை மண்ணை போட்டு நிரப்புவது எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் கோட்டைக்காடு முனியப்பர் கோயில் முதல் பாசிக்குளம் வரை உள்ள 1.5 கிமீ செந்துரை ஊராட்சி ஒன்றிய சாலையையும், கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பாலம் முதல் பெண்ணாடம் வரை 3 கிமீ சாலையை கிராமச்சாலை (RR) யில் சேர்த்து தரம் உயர்த்தி போடவேண்டும் என்னும் கோரிக்கை போராட்டக்காரர்களால் முன் வைக்கப்படு சம்பந்தப்பட துறைகளுக்கு பரிந்துரைக்கப்படும் என அரசு அதிகாரிகள் ஒப்புதல் ஒளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.