அலங்காநல்லூர், ஏப்.10.
மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகே
கோவிலூரில் உள்ள உச்சிமாகாளிஅம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் முதல் நாள் கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது. பின்னர் அன்றிரவு சாமி சாட்டுதலும் நடந்தது
. 2ம் நாள் அம்மன் புறப்பாடாகி பெரிய இலந்தைகுளம். சென்று கரகம் ஜோடித்து கோவிலுக்கு வந்து சேர்ந்தது. நேற்று அதிகாலையில் மாவிளக்கு எடுக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சனம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்கள் செலுத்தப்பட்டது. திருவிழாவையொட்டி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டனர். திருவிழா ஏற்பாடுகளை கோவிலூர் கிராம பொதுமக்கள், மரியாதை காரர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்