குடவாசலில் நடைபெற்ற
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 25 ஆம் ஆண்டு கழகக் கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடை வீதியில் தேமுதிக திருவாரூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது குடவாசல் பேரூர் செயலாளர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார்..இந்த பொதுக் கூட்டத்தில் பீனிக்ஸ் பறவையாக தேமுதிக என்ற தலைப்பில் மாவட்ட கழக செயலாளர் சண்முகராஜ் எழுச்சி உரையாற்றினார்
அவரை தொடர்ந்து மாநில கழக செய்தி தொடர்பாளர் நடிகர் ராஜேந்திரநாத் தேமுதிக அன்றும் இன்றும் என்றும் என்ற தலைப்பில் வீர உரையாற்றினார். மேலும் இந்த 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கழக கொடி நாள் என்ற தலைப்பில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஜீவாபார்த்திபன் புகழுரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் வாசுதேவன், மாவட்ட பொருளாளர் சண்முகம்,தொகுதி பொறுப்பாளர்கள் சசிகுமார் மற்றும் ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, ஒன்றிய செயலாளர் செல்வம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செந்தமிழன் நன்றி உரையாற்றினார்… இந்த பொதுக்கூட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் குடவாசல் பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்….