உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஹீ மங்களநாத சுவாமி திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் காலை அதிவிமர்ச்சையாக நடைபெற்றது
முன்னதாக ஆறுகால யாகபூஜையினை பிச்சைகுருக்கள் மற்றும் சிவாச்சாரியார்களாள் நடைபெற்றது ராணிமற்றும் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்
சமஸ்தானத்தின் ராணி அவர்கள் பச்சைகொடி அசைக்க 11ராஜகோபுர கலசத்திலும் மூலஸ்தான கலசத்திலும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினார்கள் அப்போது வானத்தில் 11கருடன் வட்டமடித்தது இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் அறநிலையத்துறை உயரதிகாரிகள் நீதிபதிகள் மாவட்ட வருவாய் அலுவலர்கள் காவல்துறையினர் மற்றும் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்துகொண்டனர் ராமநாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் பகுதியில் இருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டது