துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம்
துறையூர் ஏப்-04
திருச்சி மாவட்டம் துறையூர் மின்சாரத் துறை அலுவலகத்தில் ஏப்ரல் 5ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. துறையூர் – முசிறி செல்லும் சாலையில் உள்ள வருவாய் பிரிவு – துறையூர் கோட்டம், அலுவலகத்தில் 05. 04 .2025 சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் துறையூர் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் மின் கட்டண தொகை குறைபாடுகள்,மின் மீட்டர்கள் குறைபாடுகள், குறைந்த மின்அழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின் தொடர்பான புகார்களுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.எனவே பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குள்ள மின் சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்து பயன் பெறலாம் என துறையூர் கோட்ட செயற்பொறியாளர் பொன் . ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்