பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (39) இவர் கடந்த 2018 ல் MARUTHI SUZUKI கம்பெனியில் BALLENO மாடலில் கார் ஒன்று வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்

இந்நிலையில் இன்று (03.04.2025) அடைக்கம்பட்டி T.களத்தூர் பிரிவு சாலை அருகே தனியார் தேநீர் கடை முன்பு இதே பதிவெண் கொண்ட கார் நிற்பதாக இளஞ்செழியன் கார் நிற்பதாக அந்த தேநீர் கடையில் பணிபுரியும் ஆனந்த் என்பவர் இளஞ்செழியனிற்கு தகவல் கொடுத்துள்ளார்‌.தனது கார் வீட்டில் நிற்கும்போது என்னுடைய பதிவெண் அதே கம்பெனி மாடலில் எப்படி இருக்கும் முடியும் என்று சந்தேகமடைந்த இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு தனது உறவினர்களுடன் சென்று அந்த காரின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்

சந்தேக அடிப்படையில் வந்த காரில் பாஜக மாநில செயலாளர் என்ற பதவி பெயர் பலகை இருந்துள்ளது‌.மேலும் காரில் வந்தவர்கள் பெரம்பலூரை அடுத்த மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிச்சை முத்து மற்றும் அவரது மகன் சிவா என்பதும் தெரியவந்துள்ளது

இந்நிலையில் ஒரே கம்பெனி மாடல் கார்கள் ஒரே பதிவெண்ணுடன் எப்படி இருக்கமுடியும் என்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுடன் இளஞ்செழியன் பிச்சை முத்துவின் காரின் ஆவணங்களை காட்ட சொல்லி காரை திறந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பிச்சை முத்து இளஞ்செழியனை தாக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் உடனிருந்த வர்கள் பிச்சைமுத்துவை பிடித்து செஞ்சேரி ஊரக காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து ஒப்படைத்துள்ளனர்.இது தொடர்பாக இளஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் பிச்சைமுத்துவையும் அவரது மகன் சிவா வரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

காவல்நிலையத்திற்கு வெளியே நின்ற பாஜக பதவி பெயர் பலகையுடன் நின்ற காரின் பெயர் பலகை அகற்றி பிச்சைமுத்துவிற்கு ஆதரவாக வந்தவர்கள் உடைத்ததால் இளஞ்செழியன் தரப்பினர் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளஞ்செழியன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்

ஒரே பதிவெண் கொண்ட கார் உரிமையாளர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *