திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர் கலாவதி தலைமை தாங்கினார். அனக்காவூர் வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியைஇரா.தேன்மொழி வரவேற்றார்.

ஆசிரியை அப்ரின்பானு ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி உறுதிமொழியை மீனா வாசிக்க, பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், முக்கிய பிரமுகர்கள், செய்யாறு லயன்ஸ் சங்கத்தினர், சித்தார்த்தா அறக்கட்டளை நிறுவனர் தசரதன், வந்தவாசி எக்ஸ்னோரா கிளை பொறுப்பாளர்கள்,வந்தை முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பிறகுமாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் மற்றும் 102 மாணவர்களுக்கு மெடல், ஷீல்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும் உலக சாதனை நிகழ்வுக்காக தமிழில் கையொப்பம் செய்தமைக்கு பள்ளிக்கு கின்னஸ் சான்றிதழ், பாரதியார் கவிதை புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இவ்வாண்டில் ஓய்வு பெறும் அறிவியல் பட்டதாரி ஆசிரியை மீனா, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இறுதியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ண வேணி முருகன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.