தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு நிகழ்ச்சி இன்று (03.04.2025) நடைபெற்றது.
நகர கழக செயலாளர் ராஜபூபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்