குழந்தை நட்சத்திரம் லியானா விற்கு விருது வழங்கும் விழா” தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழாவில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அகஸ்தியர் ஹெர்பல் நிறுவனர் நாகலிங்கம், வாழை ஹோட்டல் நிறுவனர் இணைந்து குழந்தை நட்சத்திரம் லியானா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா ஆகியோர்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் அப்பா பாலாஜி, வழக்கறிஞர் பிரியதர்ஷினி, எழுத்தாளர் விவேக் ராஜ் மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. நடனமும், பாட்டும், பேச்சும் விழாவிற்கு பெருமை சேர்த்தது.