மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை மனுவாக எழுதி எடுத்துச் சென்றபோது, அதனை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் பரிசீலனை செய்யாததோடு, கோரிக்கை மனு கசக்கி குப்பைக்கூடையில் வீசி, மனு கொடுக்கச் சென்ற அலுவலர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்-வின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இளவரசன் உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி, கண்டனம் தெரிவித்தும் பேசினர்.