கோவையில் ஜெயம் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தானை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஜெயம் டிரஸ்ட் மற்றும் ஜெயம் ஆட்டிசம் மையம் இணைந்து வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயம் ஆட்டிசம் மையத்தின் நிறுவனர் டாக்டர் கவிதா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற,இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீல நிற பலூன்கள் பறக்க விட செய்தார்.

அதனை தொடர்ந்து வாக்கத்தான் நிகழ்வை துவக்கும் போது கொடியை ஆட்டிசம் பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை பிடித்து அசைக்க செய்து வாக்கத்தானை துவக்கி வைத்தார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது…

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பல்வேறு அறிவுரைகள் விழிப்புணர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார். இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபிடித்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை அளிக்கலாம் எனவும் அதனை பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ..

இதில் மருத்துவர்கள் ஆன்காலஜிஸ்ட் தெரபி நிபுணர் ,சுதா,
பிசியோதெரபிஸ்ட் பழனிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *