பெரம்பலூர்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள், தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக பரங்கிபேட்டையில் தங்கி செயல்பட்டு வருகின்றனர். சமூகப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்த மாணவிகள் புதுப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் தண்ணீர் சேகரிப்பு மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடைபெற்றது.இதில் மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு “நீரை சேமிப்போம் – எதிர்காலத்தை பாதுகாப்போம்”, “காசநோயை முற்றிலும் ஒழிப்போம்” போன்ற முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தண்ணீர் சேகரிப்பின் அவசியம், அதன் முறைகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வழிகள் பற்றி மாணவர்கள் விளக்கமளித்தனர்.
மேலும், காசநோய் பரவும் விதம், அதன் தாக்கங்கள், தடுப்பு மற்றும் அரசு வழங்கும் இலவச சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன.இதில் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளின் சமூகப் பொறுப்பு செயல்பாடு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்