வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 1ந் தேதி துறையூர் வட்ட மைய தலைவர் சத்தீஸ்வரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார்.மாநில அளவில் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது
அரசானை 33-ல் திருத்தம் செய்து மீண்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரியும்,அலுவலக உதவியாளருக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க கோரியும்,சிபிஎஸ் சந்தா இறுதி தொகை வழங்க கோரியும்,தேர்தல் வாக்குறுதியாக அளித்த பழைய ஓய்வூதியத்தை அமுல் படுத்தகோரியும் கோஷம் எழுப்பினர்.
மாநில செயலாளர் கார்த்திக் கோரிக்கை பற்றிய விளக்க உரையாற்றினார்.இந்த காத்திருப்பு போராட்டம் ஏப்ரல் 1ந் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி முதல் மறுநாள் காலை 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், வட்ட துணைச் செயலாளர்கள் நிஷாந்த், பிரபாகரன், மகளிர் அணி சுபத்ரா, சுமதி, ரமா நந்தினி, ராஜேஸ்வரி, பானுமதி, கலைச்செல்வி, யோக லட்சுமி, அமுதா, அஜய் சங்கர், செல்வம், மைதீன், வட்டத் தணிக்கையாளர் உத்தண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.