கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
கல்லூரி மாணவி வித்தியா உயிரிழந்த விவகாரத்தில்– காதலை கைவிடாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மாணவியின் சகோதரன் போலீசில் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…..

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. கூலி தொழிலாளியான இவருக்கு தங்கமணி என்ற மனைவியும் சரவணன் என்ற மகனும் வித்தியா மகளும் உள்ளார். நான்கு பேரும் பருவாய் பகுதியில் குடியிருந்து வருகின்றனர் வித்தியா 22 கோவை அரசு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் வித்தியா திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் வித்தியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ விழுந்ததில் வித்தியா உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தார் வித்தியாவின் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் வித்தியாவின் காதலன் வெண்மணி இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மெக்கானிக்கல் வித்தியாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தும் படி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் சார் பல்லடம் வட்டாட்சியர் தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவி யுடன் உடலை நேற்று மாலை தோண்டி எடுத்து மயானத்திலேயே வைத்து பிரத பரிசோதனை செய்தனர். இதில் வித்தியாதலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவரது உடல் பாகங்களை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் பிராத பரிசோதனை முடிந்தவுடன் வெளியே இருந்த வித்தியாவின் தந்தை தண்டபாணி மற்றும் மகன் சரவணன் இருவரையும் விசாரணைக்காக காமநாயக்கன்பாளையம் போலீசார் அழைத்துச் சென்றனர். வித்தியாவின் தலையில் பலத்த காயம் இருந்தது கொலையா அல்லது விபத்தா என்பது இந்தியாவின் உடல் முழுமையான உடற்கூறாய்வு செய்த பின்னரே தெரியவரும் அதன் பின்னரே அறிக்கையானது போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று போலீசார் வித்தியாவின் தாய் தந்தை மற்றும் அவரது மகனிடம் நடத்திய கிடு க் கு பிடி விசாரணையில் தனது தங்கையிடம் பலமுறை காதலை கைவிடுமாறு தெரிவித்த நிலையில் அவர் காதலை கைவிட மறுத்தார் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் தற்போது போலீசார் வித்தியாவின் அண்ணன் சரவணனை கைது செய்ததோடு வித்தியாவின் தந்தை தண்டபாணி மற்றும் தாய் தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.